mp h.vasanthakumar under ventilation care

கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருவதாகத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Advertisment

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர். வசந்தகுமார் (70), கடந்த மாதம் முதல் சென்னையில் தங்கி கட்சிப் பணி மற்றும் வியாபார பணிகளைக் கவனித்து வந்தார். இந்நிலையில் எம்.பி. வசந்தகுமார் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment