/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/650_36.jpg)
தமிழகத்தில் பிரபலமானவர்களை கட்சியில் இணைத்து வருகிறது பாஜக. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் அக்கட்சியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து நடிகை நமீதா, நடிகர் ராதாரவி உள்ளிட்ட திரை பிரபலங்களைகட்சியில் இணைத்த பாஜக, மேலும் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்சியில் இணைத்து மாநில அளவில் பொறுப்புகளையும் கொடுத்துள்ளது.
பாஜகவில் நடிகை குஷ்பு இணைகிறார் என்று கடந்த இரண்டு மாதமாக பேசப்பட்டது. அதனை மறுத்ததுடன், காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு பாஜகவை எதிர்த்து பேசி வந்தார். இந்த நிலையில் நேற்று நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, டெல்லியில் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளர் பொறுப்பை வகித்த அவருக்கு உரிய பதவி வழங்கப்படும் என்று பாஜக நம்பிக்கை அளித்துள்ளது.
தொடர்ந்து தமிழகத்தில் மேலும் பல பிரபலங்களை வளைக்க திட்டமிட்டுள்ள பாஜக, தயாரிப்பாளரும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும், ஓரிரு நாளில் பாஜகவில் அவர் இணையவுள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)