Advertisment

'இந்த நடவடிக்கை  நிம்மதியளிக்கிறது; வரவேற்கத்தக்கது' -பாமக அன்புமணி ட்வீட்   

 'This move is reassuring; It's welcome'-PMK Anbumani tweeted

ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய தேர்வு முகமையின் இந்த நடவடிக்கை நிம்மதியளிக்கிறது; இது வரவேற்கத்தக்கது என பாமகதலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர், ''தமிழ்நாட்டில் 2020-21 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால், பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும்என அறிவிக்கப்பட்டிருந்ததால் தமிழக மாணவர்களால் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் இந்த சிக்கல் குறித்து நான் தான் தமிழக அரசின் கவனத்திற்கும் தேசிய தேர்வு முகமையின் கவனத்திற்கும் கொண்டு சென்றேன். நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் இதை சுட்டிக்காட்டி தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.

Advertisment

அதையேற்று தமிழ்நாடு மாநில பாடத் திட்ட மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஜே.இ.இ நுழைவுத் தேர்வை எழுதி வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத்தெரிவித்துள்ளார்.

pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe