Advertisment

முடிவுக்கு வருகிறதா அண்ணாமலை அரசியல்? கூண்டோடு வெளியேறிய பாஜகவினர்

More than 10 members have left the tamilnadu BJP

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

Advertisment

இந்த நிலையில் தான் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார், ஐ.டி. விங் செயலாளர் திலிப் கண்ணன், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதி ஆகியோர் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதையடுத்து அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் கண்டிப்பாக ஒரு எதிர்வினை இருக்கும் என எடப்பாடி பழனிசாமியை கடுமையாக எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவின் முன்னால் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் பலரும் தங்களது கண்டனங்களைத்தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், இன்று லதா, வைதேகி ஆகிய இரண்டு பாஜக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பாஜகவின் ஐ.டி விங் நிர்வாகிகள் 10 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். மேலும், இவர்கள் அனைவரும் நிர்மல் குமார் தலைமையில் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

admk Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe