Advertisment

மோகன் பாகவத் பாகிஸ்தான் எல்லையில் காவல் காக்கவேண்டும்! - ஓவைசி கருத்து

ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் ராணுவத்தைவிட வேகமாக தயாராகி விட முடியுமென்றால், மோகன் பாகவத் பாகிஸ்தான் எல்லையில் நின்று காவல் காக்கவேண்டும் என இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்றுசெய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய மஜ்லிஸ் இட்ல்காத்-உல்- முஸ்லிமீன் அமைப்பின் தலைவரான அசாத்துதீன் ஓவைசி பேசுகையில், ‘ஒரு கலாச்சார அமைப்பால் எப்படி ராணுவத்துக்கு இணையாக பயிற்சி பெறமுடியும்? அவரது இந்தக் கருத்தை உற்று நோக்கவேண்டும். எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவரை ராணுவ வீரரோடு ஒப்பிடமுடியும்? மோகன் பாகவத்தின் இந்தக் கருத்து மிகவும் மோசமானது. அதுபல உள்ளர்த்தங்களையும், எதிர்வினைகளையும் ஏற்படுத்துவதாக உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Advertisment

Mohan

மேலும், ஆவேசமாகப் பேசிய அவர், ‘ஒருவர்ராணுவ வீரராகஉருவாகஎவ்வளவு பாடுபட வேண்டும் என்று மோகன் பாகவத்துக்குத் தெரியுமா? நம் இந்திய வீரர்கள் செத்துமடிந்து தியாகம் செய்வதை நாடு அறியும். மோகன் பாகவத் தாம் கூறிய கருத்தை நம்புகிறார் என்றால், பாகிஸ்தான் எல்லையில் போய் காவல் காக்கட்டும்’ என கூறியுள்ளார்.

முன்னதாக, பீகாரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டத்தில் பேசிய மோகன் பாகவத், ‘போர் வந்தால் இந்திய ராணுவம் தயாராக ஆறேழு மாதங்கள் ஆகலாம். ஆர்.எஸ்.எஸ்.க்கு மூன்று நாட்களே போதுமானது’ எனக் கூறியது கிளப்பியது.

RSS Indian Army mohan bhagwat
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe