Advertisment

மோடி முன்னிலையில் கையெழுத்தாகிறதா தேமுதிக கூட்டணி?

நான்கு அல்லது ஐந்து மக்களவை தொகுதி மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி தேமுதிகவுக்கு கிடைக்குமா? அதிமுக கூட்டணியில் இன்று இணையுமா தேமுதிக? தனித்து நிற்குமா? தனித்து நிற்பதில் சுதீஷ் விரும்பவில்லையா? அதிமுக - பாஜக கூட்டணி அமைந்து முதல் பொதுக்கூட்டத்திற்கான விளம்பங்களில் விஜயகாந்த் படம் இடம்பெறவில்லையே? மோடி மேடையில் விஜயகாந்த் ஏறுவாரா?என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் விவாதம் நடந்து வருகிறது.

Advertisment

modi vijayakanth

தேசிய கட்சியுடன்தான் கூட்டணி என்று தேமுதிக கூறி வந்தது. அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசி முடிவு செய்தாலும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணி ஒப்பந்தம் போட தேமுதிக நிர்வாகிகள் விரும்பவில்லை. ஆகையால் தேமுதிக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர், இன்று மதியம் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு திடீரென கலந்து கொண்டு, மோடி முன்னிலையில் கூட்டணி ஒப்பந்தம் போட முடிவு செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதோடு, தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்குள் என்ன அவசரம், கூட்டணி ஒப்பந்தத்திற்கு முன்பாகவே பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டால், நாம் கேட்கும் தொகுதி எண்ணிக்கையோ, தொகுதிகளோ கிடைக்காது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவரட்டும் அதற்கு பிறகு கூட்டணி ஒப்பந்தத்தை பார்த்துக்கொள்ளலாம் என்கிறார்களாம் தேமுதிக நிர்வாகிகள்.

Advertisment

அரசியல் பார்வையாளர்களோ இன்னும் சில மணி நேரங்கள்தானே பொறுத்திருந்து பார்ப்போம் என்று விவாத்தை முடித்துவிட்டனர்.

admk Alliance modi vijayakanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe