/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2528.jpg)
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, வரும் ஜனவரி மாதம் 12-ம் தேதி, அக்கட்சியின் சார்பில் மதுரையில் ‘மோடி பொங்கல்’ என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவிருப்பதாகவும் அறிவிக்கை வெளியிட்டுள்ள நிலையில், விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மார்கழியில் பொங்கலா?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மார்கழியில் பொங்களா? ,
ஜனவரி 14 ஆம் நாள் தை மாதம் முதல் நாள் தான் பொங்கல் விழாவை உண்மை தமிழன் கொண்டாடுவான் …
ஆன கொடுமை இந்த சங்கிகள் பொங்கலை கூட மோடி பெயரில் கொண்டாடும் அவலம் …?? ஆண்டின் கடைசிநாளும் கொடுமையா திரு @annamalai_k இது நியாமா?. நவராத்திரிக்கு முன் குஜராத்தில் 1/2 https://t.co/k3xmmOcVn1
— Manickam Tagore .B??✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) December 31, 2021
‘ஜனவரி 14-ஆம் நாள், தை மாதம் முதல் நாள்தான் பொங்கல் விழாவை உண்மைத் தமிழன் கொண்டாடுவான். ஆனால் கொடுமை.. இந்தச் சங்கிகள் பொங்கலைக் கூட மோடி பெயரில் கொண்டாடும் அவலம்? ஆண்டின் கடைசி நாளும் கொடுமையா திரு.அண்ணாமலை? இது நியாயமா? நவராத்திரிக்கு முன் குஜராத்தில், 3 நாட்களுக்கு முன் விழா நடக்குமா? அதுவும் மோடி பெயரில் நவராத்திரி? விஐயதசமி 14ம் தேதி அன்று மோடி பெயரில் நடக்குமா விழா நாக்பூரில்? பின் ஏன் இந்த அவமதிப்பு தமிழர்களின் விழாவிற்கு? மார்கழியில் இசை விழா நடத்துங்கள் வரவேற்கிறேன்.’ எனப் பதிவு செய்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)