Advertisment

சம்மந்தமில்லாமல் பேசுவதுதான் மோடிக்கு வேலை! - ராகுல்காந்தி தாக்கு

அடிப்படைப் பிரச்சனைகள் ஏராளமாகஇருந்தாலும், மோடி சம்மந்தமில்லாத விஷயங்களைப் பற்றிதான் பேசிக் கொண்டிருப்பார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisment

Rahul

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 12ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், இன்று மாலை 5 மணியோடு தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவடைகின்றன. இந்நிலையில், கடந்த பல நாட்களாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர், ‘நான் கர்நாடக மாநிலத்தில் சில மாதங்களாக பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறேன். நாங்கள் ஒன்றிணைந்து நடத்தும் பிரச்சாரங்களில் அத்தியாவசிய பிரச்சனைகள் குறித்து விரிவாக விவாதிக்கிறோம். மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் விதமாக எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்திருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சியினருக்கு மாநில முதல்வர், மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் என்னைப் பற்றி பேசுவதைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘தலித் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் ஒடுக்குமுறைகளைக் குறித்து பேசுவதற்கு மோடிக்கு நேரமிருக்காது. ஆனால், அத்தியாவசியமற்ற புல்லட் ரயில்களைப் பற்றி மணிக்கணக்காக பேசுவார். எங்கள் தேர்தல் வாக்குறுதிகளை காப்பியடித்திருப்பதன் மூலமே, அவர்கள் எந்தளவிற்கு பொறுப்பானவர்கள் என்பது தெரிந்துவிட்டது’ என பேசியுள்ளார்.

Yeddyurappa Siddaramaiah karnataka election Narendra Modi Rahul gandhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe