Advertisment

மோடி புதிய அமைச்சரவையில் மாற்றம்? 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.இந்த நிலையில் மோடியின் புதிய அமைச்சரவையில் நிறைய மாற்றம் இருக்கும்ன்னு அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.நிர்மலா சீதாராமனுக்கு அருண்ஜெட்லியிடம் இருக்கும் நிதித்துறை வரப் போகுதுன்னு கூட டாக் அடிபடுது. ஆனால் நிலவரம் என்னன்னா, அருண்ஜெட்லி, தனக்கு உடல் நிலை சரியில்லாததால் இந்தமுறை தனக்கு நிதித்துறை வேண்டாம்ன்னு சொல்றாராம். அமைச்சரவையில் சில புதியவர்களுக்கும் வாய்ப்பு இருக்கும்ன்னு சொல்லப்படுது.

Advertisment

modi

மேலும் மீண்டும் மோடின்னதும், விரைவில் காலியாக இருக்கும் தமிழக டி.ஜி.பி. பதவியில் உட்கார சிலர் முண்டியடிக்க ஆரம்பிச்சிருக்காங்க. குறிப்பா திரிபாதி ஐ.பி.எஸ்., தனக்கு இருக்கும் டெல்லித் தொடர்புகள் மூலம் விறுவிறுப்பா காய்களை நகர்த்தறாராம். காவல்துறை வட்டாரமோ, தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்தான் டி.ஜி.பி. ஆகணும்னு முதல்வர் எடப்பாடி விரும்பறார். திரிபாதியோ ஒரிசா பிராமணர். அதனால் யாருடைய விருப்பம் நிறைவேறப் போகுதுன்னு தெரியலையேன்னு கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Ravindranath Kumar ministers admk AmitShah modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe