Advertisment

எல்லாரையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்... பாஜக எம்.பி.களின் செயலால் கோபமான மோடி! 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 353 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ள பாஜக கட்சியின் எம்.பி.க்கள் மீது பிரதமர் மோடி கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்றத்தில் நடக்கும் அவை கூட்டங்களில் பாஜக எம்.பி.க்கள் பெரும்பாலும் வராமல் அப்சென்ட் ஆவதால் மோடி அதிருப்தியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertisment

modi

இது சம்மந்தமாக நாடாளுமன்ற பாஜக உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ் நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். அதில் 'எந்த காரணமும் இல்லாமல் எம்.பிகள் அவைக்கு வராமல் இருப்பதை மோடி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதனால் அனைவரும் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டிய இடத்தில் பாஜக எம்.பி.க்கள் தொடர்ந்து அப்சென்ட் ஆவது எதிர் கட்சியினர் மட்டுமின்றி பிரதமர் மோடிக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறுகின்றனர்.

parliment politics amithsha modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe