உலகம் முழுவதும் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் கரோனா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இதனால், 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர், 4.2 லட்சம் பேர் குணமடைந்து மீண்டுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 9000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 850-க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கரோனா வேகமாகப் பரவிவரும் சூழலில், அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.

Advertisment

pmk

இந்த நிலையில் அன்புமணிக்கு பாஜக டெல்லி மேலிடம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதை அரசியல் தாண்டிய முக்கியத்துவம் என்று சொல்லப்படுகிறது. கரோனா பற்றிய பல்வேறு தகவல்களை அன்புமணி, தினசரி மோடிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளார். முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் என்கிற முறையிலும், டாக்டர் என்கிற முறையிலும் இவர் கொடுக்கும் தகவல்களுக்கு அதிக முக்கியத்துவத்தைப் பிரதமர் அலுவலகம் தருவதாகக் கூறுகின்றனர். மோடியின் அட்வைஸ்படி, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது அன்புமணியைத் தொடர்புகொண்டு, நிலைமை குறித்து விவாதித்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இது பா.ம.க தரப்பை உற்சாகப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.