Advertisment

சசிகலா விஷயத்தில் ஏன் தயக்கம்? திமுகவை வீழ்த்த, நீங்க என்ன பண்றீங்க... எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்த மோடி! 

கரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் முதல்வர் எடப்பாடிக்குத் தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதற்குக் காரணம் பிரதமர் மோடிதான் என்று ஹாட் டாக் அடிபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, பிரதமர் மோடி, கடந்த 19-ந் தேதி எடப்பாடியிடம்பேசியதாகச் சொல்லப்படுகிறது. அப்போது வீடியோ கான்பரன்ஸ் மூலமும் டெலிபோன் மூலமும் உரையாடல்கள் நடந்துள்ளது என்கின்றனர். தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் கரோனா நிவாரணப் பணிகள் குறித்து அக்கறையோட விசாரித்த மோடி, சர்ச்சைகள் கிளம்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியதாகச் சொல்லப்படுகிறது. பாதுகாப்பு உபகரணக் கொள்முதல் விவகாரம் பற்றி தான் மோடி கேட்கிறார் என்று புரிந்து கொண்ட எடப்பாடி, இங்கே எல்லாமே சரியாக நடக்கிறது. இருந்தும் தி.மு.க.தான் எங்களுக்கு எதிராகப் புழுதி கிளப்பி, குளிர் காயப் பார்க்கிறார்கள் என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

Advertisment

admk

இதற்கு மோடியோ, வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வை நீங்க வீழ்த்தனும்னா, அதற்கு உங்கள் கட்சியில் இருக்கும் கோஷ்டிகளை எல்லாம் முதலில்ஒருங்கிணைக்கப் பாருங்கள். சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் ஆகும் போது, அவரயும்கட்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள். அவரால் வேறவிதமான சிக்கல்கள் வராது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அப்போது தான் உங்க கட்சி வலிமையடையும். சசிகலா விசயத்தில் உங்களுக்கு எந்தத் தயக்கமும் வேண்டாம் என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கார். எடப்பாடியோ, நீங்க இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலையென்றுகூறியதாகச் சொல்கின்றனர்.

admk eps modi politics sasikala stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe