கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தக் காலகட்டத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கரோனா வைரசால் இதுவரை 19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.19 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 4.5 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு குணமாகியுள்ளார். தீவிரமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் முடங்கிப்போயுள்ள சூழலில், இந்தியாவில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ஊரடங்கை மே 3-ம் தேதி வரை நீட்டிப்பதாகப் பிரதமர் மோடி இன்று அறிவித்தார்.

Advertisment

bjp

இந்த நிலையில் மே 3 வரை ஊரடங்கு எனப்பிரதமர் அறிவிக்க என்ன காரணம் என்று பார்த்த போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு அடுத்த நாள் மே 1-ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் அதனால் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை தினம், அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மே 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களும் சனி ஞாயிறு என்பதால் அந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் பிரதமர் மோடி மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.