எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் குறித்த திட்டத்தைப்பற்றிய தகவல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்திற்குப்போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. பா.ஜ.க.வைப் பொறுத்தவரை தமிழகத்தில் தங்கள் கட்சிக்கான சாதகமான நிலையை உருவாக்கத்தான் அ.தி.மு.க. அரசை நீடிக்க விட்டிருப்பதாகச் சொல்கின்றனர். கூட்டணி நீடித்தால், எடப்பாடியின் தேர்தல் விருப்பம் நிறைவேறும் என்கின்றனர். அதில் பா.ஜ.க.வின் கை ஓங்கியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. எடப்பாடி மூவ் பற்றி மோடிகிட்ட அமித்ஷா டிஸ்கஸ் பண்ணியிருப்பதாகவும் சொல்கின்றனர்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
மேலும் இப்போதிருக்கும் நெருக்கடியில் அவசரமாகத் தேர்தலைக் கொண்டு வரத் தேவையில்லை. மே மாதம் நடத்தவேண்டிய தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் தேர்தல்களை, கரோனாவால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, மேலும் 6 மாதங்களுக்குத் தள்ளிவைத்துவிட்டு, கவர்னர் ஆட்சியை அமல்படுத்துவோம். அதன் மூலம் மேற்கண்ட மாநிலங்களை நாம் கையில் எடுத்து, பா.ஜ.க.வுக்கு ஏற்றவாறு பதப்படுத்திவிட்டு, அதன் பின்னர் தேர்தலை நடத்தலாம் என்று சொல்லியிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.