kamal haasan

"எங்கள் ஆட்சி அமைந்தால், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் தருவோம்" என்று கமல் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

தேர்தல் பிரச்சாரத்தில் கமல் இப்படிசொல்ல, ஏற்கனவே தன்னுடையவேலைக்கான ஊதியத்தை கமல் தரவில்லை எனநடிகை கவுதமி தெரிவித்திருந்ததைஎடுத்து, சமூக வலைதளங்களில் கமலுக்கு எதிராகப் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள். "அவங்க கணக்கை செட்டில் பண்ணிட்டு, அப்புறமா மற்ற வீட்டு இல்லத்தரசிகளுக்கு ஊதியம் கொடுங்கன்னு" நிறைய கமெண்ட்ஸ் அதில் வந்திருக்கிறது.

"அரசியல்ல இதெல்லாம் சகஜம்தானே?" என விமர்சனங்களைத் தாண்டி, கமல் முன்வைத்த 7 அம்சத் திட்டத்தில் ஒன்றாக, 'இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டம்' பெண்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

கமலின் அறிவிப்புக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு பேசும் பெண்கள், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்றால் எப்படி அதை வழங்குவீர்கள்? அதைப் பெற ஏதேனும் தகுதிகள் தேவையா? அதற்குப் படித்திருக்க வேண்டுமா? என்றெல்லாம் விசாரித்து வருகிறார்கள். கூடவே, நீங்கள் அறிவித்தது உண்மை என்றால், எங்கள் ஓட்டு உங்களுக்குத்தான் என்றும் சொல்லி, கமல் தரப்பை உற்சாகப்படுத்தி வருகிறார்களாம்.