Advertisment

“மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சிதான்” - கமல்ஹாசன்

MNM leader kamalhasan press meet at trichy

Advertisment

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திருச்சியில் மூன்றாம் கட்ட பிரச்சாரத்தில், இரண்டாம் நாளான இன்று, மகளிர் ஆலோசனை கூட்டத்தில் பங்குபெற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், “இங்கே நாங்கள், ஒரு பெரிய எழுச்சியை பார்த்து வருகிறோம். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம் இருப்பது அதிலும் மகளிர் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

தமிழகத்தில் மூன்றாவது அணி எங்கள் தலைமையில் அமையும். தமிழகத்தில் ஊழல் இல்லை என்று கூறமுடியாது. தமிழகம் முழுக்க நடைமுறையிலிருக்கும் லஞ்சத்தின் விலைப்பட்டியல் தற்போது நான் கூறுகிறேன் (அப்போது லஞ்ச பட்டியலை வாசித்தார்). இதில் பெண்களைவிட ஆண்களிடம் லஞ்சம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு பெண்ணாக இருந்தால் 300 ரூபாயும் ஆண் பிள்ளையாக இருந்தால் 500 ரூபாயும், பிறப்பு சான்றிதழ் 200 ரூபாய் ஆணாக இருக்கும் பட்சத்தில் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது என லஞ்ச பட்டியல் வாசித்தார்.

Advertisment

இணையதள வசதியுடன் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கணிணி அரசு சார்பில் வழங்கப்படும். பேப்பர் இல்லா மின்னணு இல்லங்கள், மின்னணு அலுவலகங்களை மக்கள் நீதி மய்யம் உருவாக்கும். கணிப்பொறி என்பது இலவசம் அல்ல அது அரசுடைய முதலீடு; அதை அரசு கொடுக்கும்.

ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு தலைநகர் ஆக்கப்படும். அந்தந்த தொழில் சார்ந்த, துறை சார்ந்த மாவட்டங்கள் தலைநகராக்க மக்கள் நீதி மையத்தால் முடியும்” என்றார்.

மேலும், எம்.ஜி.ஆரை மட்டுமே முன்னெடுக்கின்ற நீங்கள், கலைஞரை ஏன் முன்னெடுக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த கமல், “இங்கு எது தேவைப்படுகிறதோஅதை நான் முன்னெடுப்பேன்.இட ஒதுக்கீடு என்பது தேவையான ஒன்று; செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேட வேண்டும்” என்றார்.

மேலும் செய்தியாளர்கள் திராவிட கட்சிகளை குறித்து கேள்வி கேட்டத்தற்கு, “மக்கள் நீதி மய்யமும் திராவிட கட்சிதான்” என்றார். அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு, “மூன்றாவது அணி அமைந்தால் கமல்ஹாசன் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். மக்கள் நீதி மையம் தலைமையில்3-ஆவது அணி அமையும்;மதவாதம் இல்லை என்று சொல்லவே முடியாது.விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும். அது நம்முடைய நாட்டில் நடைபெறக் கூடாது என்பதே மக்கள் நீதி மய்யம் நினைக்கிறது.

அத்தனை லட்சம் விவசாயிகளை பார்க்க முடியாத மோடியால் கமல்ஹாசன் நான் ஒருவன் போய் எப்படி சாதித்துவிட முடியும்.;டார்ச் லைட்டு எங்களுக்கு உரியது தான். தேவைப்பட்டால் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவோம்” என்றார்.

ரஜினி அரசியல் கட்சியை துவங்குவதாக நாடகமாடுகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன் “கட்சி துவங்குவது முக்கியமல்ல அவர் உடல்நிலை தான் முக்கியம்” என்றார்.

trichy MNM kamalhaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe