மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 8ஆம் தேதி நடைபெறும் மகளிர் தின விழாவில் கட்சியில் மகளிருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, மாநில மகளிர், குழந்தைகள் நல அணியின் செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சியின் நிர்வாகத்தை மேம்படுத்திட பல்வேறு பொறுப்புகள் உருவாக்கப்பட்டு, அதற்கான நியமனங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், நமது கட்சியில் சேர்ந்து, அதன் வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கடந்த 2 ஆண்டுகளாக முக்கிய பங்களித்து வரும் மகளிருக்கான பொறுப்புகள் தமிழகம் முழுமைக்கும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதன் தொடக்கமாக மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அணியின் மாநில செயலாளராக மூகாம்பிகா ரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.