ADVERTISEMENT

ஒருபுறம் கமல் பிரச்சாரம்... மறுபுறம் கட்சி தாவிய வேட்பாளர்... ம.நீ.ம கூட்டணியில் பரபரப்பு...

11:32 AM Mar 23, 2021 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவீச்சில் செய்துவருகின்றன. இதில் 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன.

இந்த தேர்தலில் அதிமுக, திமுக கூட்டணியைத் தவிர, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்த கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ம.நீ.ம மற்றும் அதன் கூட்டணியில் உள்ள சமக, ஐ.ஜே.கே கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்ய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் முரளி கிருஷ்ணன் திமுக -விற்கு மாறியுள்ளார்.

சமக சார்பில் அவர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த சூழலில், நேற்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைச் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டதோடு, தனது வேட்பு மனுவையும் அவர் திரும்பப்பெற்றார். ம.நீ.ம தலைவர் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அதேநாளில் அப்பகுதியில் உள்ள கூட்டணிக்கட்சி வேட்பாளர் கட்சி மாறியுள்ளது அக்கூட்டணியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT