Advertisment

ம.ம.க. பொதுக்குழுவில் முக்கிய முடிவு

M.M.K. A key decision in the General Assembly of the party

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் திமுக, இப்போது வரை ம.ம.க.வை பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

Advertisment

இந்த நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு சென்னை காமராஜர் அரங்கில், அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நாளை (07/02/2024)கூடுகிறது. விரைவில் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு, ம.ம.க.வின் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இப்பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது.

Advertisment

தமிழகம் முழுவதும் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கவிருக்கின்றனர். நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய முடிவுகள் இப்பொதுக்குழுவில் தீர்மானங்களாக நிறைவேற்றப்படவுள்ளன. பொதுக்குழு முடிந்ததும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறார் ஜவாஹிருல்லா.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe