/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_668.jpg)
திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்குவதற்காக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் வந்திருந்தார். இந்த விழாவைத் தொடக்கி பேசிய பட்டிவீரன்பட்டி நகரச் செயலாளர் ராஜசேகர், “பட்டிவீரன்பட்டி நகர் பகுதியில் பல கோடி செலவில்நடந்ததிட்டப் பணிகள் அனைத்தும் தேன்மொழி கொண்டு வந்தது. ஒரு தேன்மொழி பத்து பொன்னம்மாவுக்குச் சமம். அவர் தொடர்ந்து பணியாற்றிட வாக்களியுங்கள்” எனப் பேசினார்.
அதன் பின் மாணவர்களுக்கு சைக்கிளை வழங்கிப் பேசிய தேன்மொழி, “எடப்பாடி பழனிசாமி, நீங்க பரிட்சை எழுதாமலேயே உங்களைப் பத்தாவது பாஸ் பண்ணி விட்டுவிட்டார். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பெற்றோரிடம் சொல்லி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முதலமைச்சர் ஆவதற்குஆதரவளிக்கச் சொல்லுங்கள்” என்று பேசி முடித்தார். அதிமுக நகரச் செயலாளர் ஒருவர் பொதுமேடையில் அடுத்த தேர்தல் வேட்பாளராக தேன்மொழியை மீண்டும் முன்மொழிந்திருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_138.jpg)
அரசின் நிதியிலிருந்து அரசு நலத்திட்ட உதவியான பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில், அதிமுக நகரச் செயலாளரின் பேச்சும், எம்.எல்.ஏ. தேன்மொழி சேகரின் வாக்கு சேகரிப்புப் பேச்சும், ‘இது அரசு நிகழ்ச்சியா அல்லது அரசியல் நிகழ்ச்சியா’ என எதிர்க்கட்சிகளைக்கேள்வி எழுப்ப வைத்திருக்கின்றன.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டுக் கிடைக்காதவர்கள், இந்த முறை எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் முட்டிமோதி வருகின்றனர். இந்த முறையும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில், அவர்கள் தினகரனின் அமமுகவிற்கோஅல்லது திமுகவிற்கோ ஆதரவு தெரிவிப்பார்கள் என அக்கட்சியினரிடையே பேச்சு எழுந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)