Advertisment

“நாங்க ஆரம்பிச்சா நீங்க தாங்க மாட்டீங்க..” ராஜேந்திர பாலாஜியை விளாசிய ராஜவர்மன்

MLA Rajavarman speech about Minister Rajendra Balaji at sathur election campaign

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரபணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.

Advertisment

விருதுநகர், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கு அதிமுகவில் மீண்டும்வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், அமமுக டி.டி.வி.தினகரனை சந்தித்து,அக்கட்சியில் இணைந்த சிலமணி நேரங்களிலேயே சாத்தூர் தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று (23.03.2021) தனது தொகுதியான சாத்தூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, காவல்துறை அதிகாரிகளையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டிக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள். நீங்க எங்கெங்கே பணம் வைத்திருக்கிறீர்கள் என எங்களுக்குத் தெரியும். நீங்கள் கோடிக்கணக்கான ரூபாயை ராஜபாளையத்தில் புரளவிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். நாங்க ஆரம்பிச்சாநீங்க தாங்க மாட்டீங்க” என்று பேசி வாக்கு சேகரித்தார்.

Advertisment

tn assembly election 2021 rajendra balaji rajavarman
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe