Advertisment

தயாநிதி மாறனை ஆதரித்து மு.க.தமிழரசு வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Advertisment

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், நேற்று (02-04-24) மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து மு.க. தமிழரசு தி.நகர் பகுதி வாக்காளர்களிடம் தீவிரமாகவாக்கு சேகரித்தார்.

படங்கள் - எஸ்.பி.சுந்தர்

Central Chennai Dhayanidhi maran election campaign
இதையும் படியுங்கள்
Subscribe