Advertisment

ஸ்டாலினுக்கு 'குட்பை' சொன்ன ஐ-பேக்!

mkstalin

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஐ-பேக் அலுவலகத்திற்கு நேரில் சென்றிருக்கிறார். அப்போது அவரை ஐ-பேக் நிறுவன ஊழியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது "ஸ்டாலின் தான்வராரு"என்ற பாடலும் ஒலிபரப்பப்பட்டது. பிரசாந்த் கிஷோர், சபரீசன் ஆகியோருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார் ஸ்டாலின்.

Advertisment

அப்போது, "சென்னையில் வாக்குப்பதிவு பெரிதாக இல்லையே?" என்று ஐபேக் டீமிடம் ஸ்டாலின் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், "வாக்குப்பதிவு குறைவுக்குகரோனா உள்பட பல்வேறு காரணங்கள் இருக்கிறது. வாக்குப்பதிவை வைத்து நம்ம வெற்றியை நாம் சந்தேகப்பட வேண்டியது இல்லை.ஆளுந்தரப்பின் கடைசி நேர மேஜிக்குகளை எல்லாம் தாண்டி, திமுகவுக்கு 140 சீட் வரை கிடைக்கும். கூட்டணிக் கட்சிகளையும்சேர்த்து நல்ல ரிசல்ட் வரும்" என்று சொல்லியிருக்கிறார்கள்.

Advertisment

தேர்தலோடு ஐபேக் டீமிடம் திமுக போட்டிருந்த ஒப்பந்தமும் முடிவடைந்தது. அதனால்தான், ஸ்டாலின் நேரில் சென்றுள்ளார். மேலும், அறிவாலயத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அலுவலகத்தையும் ஐபேக் ஊழியர்கள் காலி செய்துவிட்டு குட்பை சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்கள். ஐபேக் டீமுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அந்த அலுவலகம், தற்போது கட்சியின் செய்தித் தொடர்பு நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

i pac team Prashant Kishor
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe