சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்திருக்கும்தமிழக முதல்வரின் இல்லத்தில், தி.மு.கவின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அவரது தாயர் இறப்புக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது முதல்வரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்தச் சந்திப்பின்போது தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.