Advertisment

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் 6ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பரப்புரை கால அவகாசம் இன்று (04.04.2021) மாலை 7 மணியுடன் நிறைவடைகிறது. அதனால், அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை, சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஐஸ் ஹவுஸ் பகுதியில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரம் முடிந்தபின் உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்த தொண்டர்களுடனும் பொதுமக்களுடனும் செல்ஃபி எடுத்துகொண்டார்.