Advertisment

தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

 MK Stalin's appeal to DMK chief

Advertisment

தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (04/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "பரமக்குடியைச் சேர்ந்த பெண் தொண்டர் திமுக வெற்றி பெற்றதற்காக நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தியதாக செய்தியைப் படித்து நடுக்கமுற்றேன்; சகோதரி வனிதா விரைவில் உடல்நலம் பெற்று இயல்பு வாழ்வுக்கு திரும்ப வேண்டும். உங்கள் உடலை ஒருபோதும் நம் வெற்றிக்காகச் சிதைத்துக்கொள்ளாதீர்கள். அது எனக்கு வருத்தத்தையே வரவைக்கும்.

வெற்றிக்காணிக்கை என்ற பெயரில் தங்களது உடலுக்கு ஊறு விளைவிக்க வேண்டாம்; திமுக தொண்டர்கள் துயரத்தை உண்டாக்கும் நிகழ்வுகளை செய்யக்கூடாது என கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் புன்னகையில்தான் நம் அரசின் வெற்றி அடங்கியிருக்கிறது. கட்சியைச் சார்ந்த தொண்டர்கள் ஏழை எளிய மக்களுக்கு நற்பணி ஆற்றுவதை உங்களுடைய காணிக்கையாக வைத்துக்கொள்ளுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

chief ministers Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe