Advertisment

"டெல்லிக்கு காவடி தூக்க போறேனா?" - முதல்வர் மு.க.ஸ்டாலின் 

mk stalin

Advertisment

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பல விஷயங்களைப்பற்றி பேசினார்.

அதில் பிஜேபி - திமுக உறவை குறிப்பிட்டு அவர் கூறியதாவது, "டெல்லிக்கு காவடி தூக்கவா போறேன்?. கை கட்டி வாய் பொத்தி உத்தரவு என்னனு கேக்கவா போறேன்?. கலைஞர் புள்ள நானு. உறவுக்கு கை கொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம் என்ற வரியை மனதில் நிலை நிறுத்தி இருப்பவன் நான். ஆகவே தமிழக முதல்வர் என்ற முறையில் ஒன்றிய அரசிடம் பேசி தமிழகத்திற்கும் தமிழ் நாட்டு மக்களுக்கும் தேவையான திட்டங்களை பெற வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது ஆகவே ஒன்றிய மாநில அரசுகளுக்கு இடையே உறவு இருக்கிறதே தவிர திமுகவிற்கு பாஜகவிற்கும் அல்ல. திமுகவின் கொள்கைக்கும் பாஜகவின் கொள்கைக்கும் ஏந்த உறவும் கிடையாது . ஆகவே சகோதரர் திருமா கிஞ்சித்தும் நீங்கள் கவலை படவேண்டாம்" என கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe