Advertisment

இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது..! -மு.க.ஸ்டாலின் கண்டனம்!

mkstalin

Advertisment

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டதால் இருவர் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் இன்று (22-9-2020) அவர் கூறியிருப்பதாவது,திருப்பூர் அரசு மருத்துவமனை ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்ட கவுரவன், யசோதா ஆகிய இருவரும் மூச்சுத்திணறி இறந்து போயிருக்கிறார்கள். இவர்களது மரணத்துக்குக் காரணம் ஐ.சி.யூ வார்டில் திடீரென மின் தடை ஏற்பட்டு அதனால் இவர்களுக்குத் தரப்பட்டு வந்த ஆக்சிஜன் தடைப்பட்டுள்ளது. இதைவிடக் கொடூரமான மரணம் இருக்க முடியாது. உலக விருதை எல்லாம் பெற்றுவிட்டதாக உளறிவரும் எடப்பாடி ஆட்சியின் இலட்சணம் இது!

கரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன! மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது! இவ்வாறு கூறியுள்ளார்.

hospital goverment thirupur mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe