stalin

திமுகவின் மண்டல மாநாடு ஈரோட்டில் வருகிற 24, 25 என இரு நாட்கள் நடக்கிறது. சமூக நீதி, மதசார்பின்மை, மாநில சுயசாட்சி என்ற மூன்று தலைப்பின் கீழ் நடக்கும் இம்மாநாடு பெருந்துறை நான்கு வழிச்சாலையில் விஜயமங்கலம் அருகே சரளை என்ற இடத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு வருகிறது. இம்மாநாட்டில் தி.மு.க.வினர் 10 லட்சம் பேர் வரை கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டு பணிகள் நடப்பதை நேரில் வந்து பார்வையிட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 16ந் தேதி காலை 10 மணிக்கு பெருந்துறை வருகிறார். பந்தல் அமைப்பு, மேடை, மற்றும் குடிநீர், சுகாதார வசதிகள் செய்வது, வாகனங்கள் நிறுத்துவது போன்ற அத்தியாவசிய ஏற்பாடுகளை நேரில் பார்க்கும் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு மாநாட்டுக்கான ஆலோசனைகள் வழங்கவுள்ளார்.