ADVERTISEMENT

மிசோரம் சட்டப்பேரவை தேர்தல்; காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

03:10 PM Oct 16, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலுக்கான தேதிகளைத் தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி, தெலங்கானா மாநிலத்தில் நவம்பர் 30 ஆம் தேதியும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17 ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7 ஆம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 25 ஆம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

மேலும், சத்தீஸ்கரில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் நவம்பர் 7 ஆம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 17 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதிக்கு பிறகு அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்படி காங்கிரஸ் கட்சி தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக 39 வேட்பாளர்கள் அடங்கிய வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். மிசோரம் மாநிலத்தில் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT