Advertisment

''தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர்கள்'' - அமைச்சர்களை எச்சரிக்கும் ஸ்டாலின்!!

'' Ministers will be fired if they make a mistake '' - Stalin warns

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசின் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்அதிகாரிகள் வெளியேறிச் சென்ற பிறகு அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியாகப் பேசியிருக்கிறார். அதில், ''அமைச்சர்கள் தங்கள் துறையில் தவறு செய்தால் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள். தங்கள் துறைகளில் நியமனங்கள், தனி உதவியாளர் நியமனங்களில் கூட வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். எந்த ஒரு முறைகேட்டிற்கும் ஆளாகாதீர்கள். நேர்மையான முறையில் இந்த நியமனங்கள் இருக்க வேண்டும்.

Advertisment

அதுமட்டுமல்லாமல் 10 ஆண்டுகளாக ஆட்சியில்இல்லாமல் தற்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எனவே, மக்களிடம் நல்ல நிர்வாகத்தைக் கொண்டு செல்ல வேண்டும். பல்வேறு பிரச்சனைகளுக்காக அல்லது உங்களது தொகுதி பிரச்சனைகளுக்காக நீங்களே நேரடியாகக் காவல் அதிகாரிகளை அழைத்துப் பேசாதீர்கள். காவல்துறை முதல்வர் வசம்தான் இருக்கிறது. எனவே, நேரடியாக என்னிடமே அந்தப் புகாரை நீங்கள் தெரிவிக்கலாம்'' எனக்கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

minister tn govt stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe