Advertisment

Advertisment

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28ல் துவங்கி ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே தேர்தல் ஆணையம் ஆகஸ்டு 05 ஆம் தேதி வேலூர் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என கூறியது. ஜூலை 30 வரை பேரவைக் கூட்டத்தொடர் நடந்தால் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்படும் என்பதால், ஜூலை 20ஆம் தேதி வரை மட்டும் கூட்டத்தொடர் நடக்கும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடித்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்,அதிமுக அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மெரினாவில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் சமாதிகளுக்குச் சென்று மரியாதை செலுத்தினர்.