லாயக்கு இல்லை... அமைச்சர்களின் பிள்ளைகள் கோபம்... நமது எம்ஜிஆர் விமர்சனம்

ரவீந்திரநாத் எம்பியாக உழைத்த ஓ.பன்னீர்செல்வம் போல தங்களை தூக்கிவிட யாரும் இல்லை என்று அமைச்சர்கள் பிள்ளைகள், தங்கள் தந்தையர்களை லாயக்கு இல்லை என்று கூறுகிறார்கள் என்று நமது எம்ஜிஆர் நாளேட்டில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

ops-opr

அதில், பல மாநிலங்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று பல இடங்களைப் பெற்றவர்கள் கூட அமைச்சர் பதவி வேண்டும் என்று மல்லுக்கட்டி நிற்கவில்லை. அனால் தனது மகனுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் முயற்சிக்கிறார்.

பல அமைச்சர்களின் பிள்ளைகள் தங்கள் தந்தையர்களை லாயக்கு இல்லை என குறை சொல்லி வருகிறார்கள். ரவிக்கு ஒரு பன்னீர் கிடைத்தைப்போல எங்களைத் தூக்கிவிட யாரும் அமையவில்லை என்று கூறி வருகிறார்களாம். இதனால் மற்ற அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் பன்னீரின் மீது வெறுப்பைக் காட்டி வருகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

admk O Panneerselvam ops ravindranath
இதையும் படியுங்கள்
Subscribe