Advertisment

அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பு மனுத் தாக்கல்!

Minister Vijayabaskar files nomination

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அவர் இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் தனது வேட்பு மனுவைத்தாக்கல் செய்தார்.

Advertisment

தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “விராலிமலை சட்டமன்றத்தொகுதி வாக்காளர்கள், அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் என்மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கை, பாசத்தினால் இன்று தேர்தல் விதிமுறைகளுக்குகட்டுப்பட்டு எளிய முறையில் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளேன்.

Advertisment

விராலிமலை தொகுதி வாக்காளப் பெருமக்கள் என் மீது நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளேன். ஏற்கனவே இந்த விராலிமலை தொகுதியில் இரண்டு முறை வெற்றிபெற்று வளர்ச்சிக்குப்பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மூன்றாவது முறையாகவும் வெற்றிபெற்று விராலிமலை தொகுதி வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன்" என்றார்.

vijayabaskar viralimalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe