இளைஞரணி அமைப்பாளர்களிடம் நேர்காணல் செய்த அமைச்சர்

minister udhayanidhi stalin interview with youth wing 

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக இளைஞரணி மாவட்ட மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் இன்று நடைபெற்றது. பெரம்பலூர், அரியலூர், திருச்சி தெற்கு, திருச்சி வடக்கு, திருச்சி மத்திய மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கான மாவட்ட மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேர்காணல் செய்தார்.

முன்னதாக கலைஞர் அறிவாலயத்தில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணாமற்றும் கலைஞர்ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேர்காணலில் பங்கேற்றனர். அமைச்சர் உதயநிதியை வரவேற்பதற்காக திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், மாநகராட்சி மேயர்அன்பழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe