Minister Udayanidhi Stalin says I will respond to criticism through my work 

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் உதயநிதி ஸ்டாலினைத் துணை முதல்வராக்க வேண்டும் என்று திமுகவினரும், தமிழக அமைச்சர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்குக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றம் தொடர்பான கடிதத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். மேலும், அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் தமிழக துணை முதலமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisment

அதன்படி தற்போது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 4 பேர் தமிழக அமைச்சரவையில் இடம் பெற உள்ளனர். அதாவது திருவிடைமருதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோவி. செழியன், சேலம் மாவட்டத்தின் பனமரத்துப்பட்டி தொகுதி எம்.எல்.ஏவான ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர்களான நாசர் மற்றும் செந்தில் பாலாஜி ஆகிய 4 பேரும் அமைச்சரவையில் இடம்பெற உள்ளனர். அதே சமயம் தமிழக அமைச்சராக உள்ள மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகிய 3 பேர் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட கே.ராமச்சந்திரன் அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, பொன்முடி, மெய்யநாதன், ராஜகண்ணப்பன், கயல்விழி செல்வராஜ் மற்றும் மதிவேந்தன் ஆகிய 6 அமைச்சர்களுக்கு துறைகள் மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisment

Minister Udayanidhi Stalin says I will respond to criticism through my work 

இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் சேகர்பாபு, சி.வெ. கணேசன், டி. ஆர்.பி. ராஜா, மெய்யநாதன், பெரிய கருப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பி.மூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல. பொறுப்பு என்பதை உணர்ந்து பணியாற்றுவேன்.

எனக்கு வாழ்த்துக் கூறியவர்கள், என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. என் மீதான விமர்சனங்களுக்கு நான் எனது பணியின் மூலம் பதிலளிப்பேன். அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அதன்படி எனது பணிகளை அமைத்துக் கொள்கிறேன். திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட போதும் விமர்சனங்கள் வந்தது. என்னுடைய பணிகள் மூலமாக மட்டும் தான் அதனை நியாயப்படுத்த முடியும். அமைச்சர் பொறுப்பு கொடுத்த போதும் விமர்சனங்கள் வந்தது” எனத் தெரிவித்தார்.

Advertisment

Minister Udayanidhi Stalin says I will respond to criticism through my work 

இதனையடுத்து தந்தை பெரியார் நினைவிடத்திலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதே சமயம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அமைச்சர்கள், இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் திமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.