Skip to main content

புளியோதரை கிடைக்கவில்லையென்றாலும், புலியை எதிர்ப்போம்! - ஓட்டும் காமெடி அமைச்சர்கள்! #2

indiraprojects-large indiraprojects-mobile

தென்மாவட்டங்களில் தொகுதி தோறும் சைக்கிள் பேரணி நடத்தி, அங்கங்கே சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தினார்கள் தமிழக அமைச்சர்கள். சைக்கிள் ஓட்டியதையே, இமாலய சாதனை என்று மார் தட்டினார்கள். இன்னும் கூட நிறையப் பேசினார்கள். அமைச்சர்கள்  நிகழ்த்திய உரையில் ஒரு சில துளிகளை இங்கே உதிர்த்திருக்கிறோம்.  

 

admk rallyவருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்...

புலியை எதிர்ப்போம்!

புளியோதரையை பத்தி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஏன் சொன்னார் தெரியுமா? புளியோதரை கிடைக்கவில்லையென்றாலும், களத்தில் இறங்கிவிட்டால், புலியை எதிர்த்து நிற்கும் தைரியம் உள்ளவர்களாக அதிமுக தொண்டர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு எத்தனையோ, வசதி வாய்ப்புக்கள் இருந்தும் அவர் நம்மோடு சைக்கிள் ஓட்டிவந்தார். அதை நாம் பார்த்தோம்.  ரோட்டுல ரெண்டு பக்கத்துலயும் கடையில இருக்கிறவங்க, அங்கே கடையில் நின்று வாங்கும் தாய்மார்கள், “நம்ம அமைச்சர் போறாரு.. பாரு..” இப்படி சொல்லும்போது பார்த்தீங்கன்னா.. ஒரு தாய்மார்கூட முகம் சுளிக்காமல், என் உடன்பிறந்த சகோதரன் செல்கிறான் என்ற உணர்வோடு அமைச்சரைப் பார்த்தார்கள். நான் ஒரு ஸ்டெப் பேக்ல வந்துட்டேன். நம்ம ராதா அண்ணனும், அமைச்சரும் முன்னால போகட்டும். தொகுதிக்குள்ள வர்றத  மக்கள் பார்க்கட்டும். அமைச்சரைப் பார்த்த 20000 பேர்ல ஒருத்தர்கூட முகம் சுளிக்காமல், இன்முகத்தோடு, தான் பெற்ற பிள்ளை போவதைப் போல ரசித்துப் பார்த்த அந்தக் காட்சி என் நினைவுக்கு வருகிறது. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறவர்களுக்கு சவுக்கடி கொடுக்கக் கூடிய பேரணி இதுவென்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதுகண்டு முதலமைச்சர் எடப்பாடி அவர்களே மகிழ்ந்துபோனார்.

 

r.b.udayakumarஎதிர்க்கட்சியினர் சைக்கிள் ஓட்ட முடியுமா?

அமைச்சர் நினைத்திருந்தால் காரில் வந்திருக்கலாம். ஆனால், வியர்க்குது விறுவிறுக்குது அவருக்கு. ஏன்னா, சைக்கிள் ஓட்டி ரொம்ப காலமாச்சு. இளைஞரணில இருக்கும் போது ஓட்டினது. இப்போது மாவட்ட கழகத்தின் செயலாளர்; மாண்புமிகு அமைச்சர் வேற. இனிமேல் சைக்கிள் ஓட்டி அவர் அமைச்சராகணுமா? அவர் எப்பவுமே இந்த விருதுநகர் மாவட்டத்துக்கு அமைச்சர்தான். அப்படியிருக்கும்போது, தொண்டர்கள் ஓட்டி வருகிறார்கள். இளம் சிங்கங்கள், தங்கங்கள் ஓட்டி வருகிறார்கள். அவர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென்றுதான் அமைச்சரே ஓட்டி வருகிறார். இந்த சைக்கிள் பேரணியை, இன்றைக்கு எதிர்க்கட்சிக்காரங்க பார்க்கிறாங்க. ஆயிரம் பேரு வெள்ளைச் சீருடையில் போறாங்க. அதுவும் அமைச்சர்கள் வேற சைக்கிள் ஓட்டிட்டு போறாங்க. அப்ப, நம்ம வேற சைக்கிள் ஓட்டணுமான்னு அவங்க யோசிக்கிறாங்க. எதை எடுத்தாலும் போட்டி போடுவாங்கள்ல. இப்ப வா மவனே.. நீயும் சைக்கிள் ஓட்டு. எதிர்க்கட்சிக்காரன் எவனுக்காச்சும் தில்லு இருந்தால், சைக்கிள் ஓட்டு பார்க்கலாம்.

 

 


எல்லாமே ஏற்பாடுதான்!

“சைக்கிள் ஓட்டும் அளவுக்கு வலிமை பெற்ற இளைஞர்கள் அதிமுகவில் மட்டுமே இருக்கிறார்கள்.” என்று மேடைப் பேச்சில் அமைச்சர்கள் இருவரும் பீற்றிக்கொள்ள,  “அட, போங்கப்பா.. எல்லாமே செட்டப்பு, பில்டப்பு” என்கிறார்கள் அக்கட்சியினரே. மேலும் அவர்கள் “பேச்சிலும், செயலிலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைக் காட்டிலும் பெரிதாக ஸ்டண்ட் அடிக்க வேண்டும் என்று மற்ற அதிமுக அமைச்சர்களும் போட்டி போடுகிறார்கள். ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று ரேட் பேசிவிட்டுத்தான் இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுகிறார்கள். திருமங்கலத்திலிருந்து ஊர் ஊருக்கு வந்து ‘சீன்’ போடும் இந்த டீமுக்கு புது சைக்கிள் வேறு கிடைத்துவிடுகிறது. சாப்பாட்டிலிருந்து சகலமும் கொடுத்தாக வேண்டும். சைக்கிள் ஓட்டியதோடு இவர்கள் பணி முடிந்துவிடுவதில்லை. பொதுக்கூட்டத்திலும் கடைசி வரையிலும் உட்கார வேண்டும். மேடையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெயரை யார் உச்சரித்தாலும் கை தட்ட வேண்டும். சைக்கிள் ஓட்டியதிலிருந்து, கூட்டம் நடத்தியது வரை அனைத்துமே பணத்தை இறைத்து, பக்காவாக நடந்த ஏற்பாடு.” என்றார்கள் வேதனையோடு.

ஆட்சியின் ஒராண்டு சாதனையை மக்களிடம் விளக்குவதற்கு ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள் அதிமுக அமைச்சர்கள். அவர்களுக்காக ‘ஓ’ போடுவோம்! மக்களிடையே நேரடியாக காமெடி காட்சிகளை அரங்கேற்றி வருவதற்காக கை தட்டுவோம்; விசிலடிப்போம்!

அடுத்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி.. .

"கடப்பாரையை வளைத்து கபாலியை அடித்த எம்.ஜி.ஆர்" - அதிமுக அமைச்சர்களின் காமெடி ஓட்டம் #1  

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...