
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விஐபிக்களின் முக்கியக்கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனைநடத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று மாலை தமிழகத் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்தின் சம்பந்தி தர்மபுரி டிஎன்சி இளங்கோவனின்நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறைசோதனையில் 7 கோடி சிக்கியுள்ளது.
இளங்கோவனுக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய இடங்களில் பள்ளிகள் இயங்கிவருகிறது. அப்பள்ளிகளுக்கு அங்கீகாராம் கொடுக்கும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்குமாலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள், போலீஸ் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் 25 பேர் 6 வாகனத்தில் வந்தனர். அதன் பின்னர் பள்ளியின் மெயின் கேட் பூட்டப்பட்டு சோதனை தொடங்கியது. மாலையில் துவங்கிய இச்சோதனை இரவு வரை நீடித்தது. அதேபோல் தர்மபுரி, சென்னை தி.நகரில் டிஎன்சி நிதி நிறுவன அலுவலகங்களிலும், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் சிக்கிய பணம், ஆவணங்கள் குறித்து விவரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இருந்தபோதிலும் முழுக்க முழுக்க சென்னையில் எந்தப் பணமும் சிக்கவில்லை.கிடைத்தது அனைத்தும் தர்மபுரியிலேயே சிக்கியுள்ளது. இந்த விசாரணையில் கிடைத்த தகவலை வைத்தே, அரூர் திருவிக நகர் பகுதியில் குமாருக்குச் சொந்தமான கே.கே.இல்லத்தை இரவு 11 மணியளவில் பறக்கும்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

சோதனையின் போது அந்த வீட்டில் அமர்ந்திருந்த அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பசுபதி ‘எதற்காக இப்படிச் சுற்றி வளைத்துள்ளனர்என்று காட்டத்துடன்’ பேசினார். பின்னர் அவர், ‘வேண்டும் என்றால் வந்து சோதனை செய்து கொள்ளுங்கள் என்று சொல்லியபடி வந்து உடனடியாக வீட்டுஜன்னல் வழியாகப் பணத்தை தூக்கி வீசியுள்ளார். ஜன்னல் வழியாக வீசிய 20 லட்சத்தைப் பிடித்துள்ளனர் வருமான வரித்துறை அதிகாரிகள். மேலும் இவருக்குத் தொடர்புடைய கொலகம்பட்டியைச் சேர்ந்தஅதிமுக ஒன்றிய உறுப்பினர்வீட்டிலும் சோதனை செய்தனர். அதேபோல்இளங்கோவன் சிட்பண்ட் நடத்திவரும் அவரது மெயின் அலுவலகமான டி.என்.சி. லாட்ஜ் கீழ் தளத்தில் 3 கோடியை, நள்ளிரவு 3 மணியளவில் பிடித்துள்ளனர். இப்படி தொடர்ச்சியாக 10 கோடி சிக்கிய நிலையிலும் மேலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.இந்நிலையில், பல முக்கிய நிர்வாகிகளும் இதில் சிக்குவார்கள் எனத் தெரிகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)