Advertisment

நீட் தேர்வு விவகாரம்; விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி! 

Minister Sivasankar hits back at Vijay over NEET exam issue

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தொடர்ந்து சமூக வலைதளத்தின் மூலம் சமூக பிரச்சனைக்குக் குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில், இன்று விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.

Advertisment

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

Advertisment

இந்த நிலையில் விஜய்க்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “நீட் தேர்வு ரத்து என்பது நீண்ட நெடிய போராட்டம். இது தமிழக மக்களுக்கும் தெரியும். கலைஞர் ஆட்சிக்காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர், ஓபிஎஸ், இபிஎஸ் ஆட்சிக் காலத்தில் தான் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. நீட் தேர்வை எதிர்த்து திமுக தொடர்ந்து போராடிக்கொண்டு வருகிறது. நீட் ரத்து என்பது மத்திய அரசை எதிர்த்து நடக்கும் போராட்டம். நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்துசெய்ய முடியும். சட்டம், நாட்டின் நடைமுறை, அரசின் நடைமுறை புரிந்தால்தான் இதுகுறித்து பேசமுடியும். சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்து பேசப்படும் பஞ்ச் வசனத்தை பேசும் சூழல் கிடையாது” என்றார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe