பொதுச்செயலாளராக இவர்தான் வேண்டும்... தொண்டர்கள் அளித்த அதிரடி ஷாக்!!!

ஒற்றைத்தலைமை கோரிக்கையை மதுரை எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா வெளிப்படையாக கூறியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

sengottaiyan

அதைத்தொடர்ந்து பல நிர்வாகிகள் அதை ஆதரித்தும், எதிர்த்தும் தங்களது கருத்துகளை கூறிவந்தனர். இந்நிலையில்தான் தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ஒரு இடைவெளிக்கு பின்னர் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். கலந்துகொள்கின்றனர். மேலும் இதில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் குறித்த முடிவுகளும் ஆலோசிக்கப்படுகின்றன.

எடப்பாடி பழனிசாமியா, ஓ. பன்னீர்செல்வமா யார் பொதுச்செயலாளர் என கேள்விகள் எழும் நிலையில், காரைக்குடி அதிமுக தொண்டர்கள் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை பொதுச்செயலாளராக நியமிக்கவேண்டும் என போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒற்றைத்தலைமையா அல்லது கூட்டணியா என்பது இன்று மதியம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

admk Edappadi Palanisamy O Panneerselvam sengottaiyan
இதையும் படியுங்கள்
Subscribe