Advertisment

“மாநில அரசின் செயல்பாடுகளை பொறுத்திருந்து பாருங்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்

Minister Sengkottayan press meet at erode

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொடச்சூர், அயலூர், கோட்டுப்புள்ளாம் பாளையம், அளுகுளி, கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை, பால் உற்பத்தியாளர்கள் சங்க கட்டிட பணிக்கான பூமி பூஜையுடன் அந்த பணிகளை 12ஆம் தேதி துவக்கிவைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், “தமிழக அரசை பொருத்தவரையில் மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அவர்கள் தேர்வு நடத்த ஆட்சேபனை எதுவும் இல்லை.

Advertisment

மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க எங்கெங்கு ஆசியர்கள் தேவைப்படுகிறார்களோ அந்த தேவைக்கு ஏற்ற வகையில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது உள்ள ஆசிரியர்களே போதும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்தால் அரசு அதையும் பரிசீலனை செய்யும்” என தெரிவித்தார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பள்ளிக்கல்வித் துறை சரியாக செயல்படவில்லை என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, “அரசு சரியான முறையில் செயல் படவில்லை என்றால்தான் வெள்ளை அறிக்கை அளிக்க முடியும். தமிழக அரசு மிக சரியாக செயல்பட்டு வருவதால் வெள்ளை அறிக்கை என்பது தேவையற்ற ஒன்று. 50 சதவிகித பாடங்களை குறைப்பது மட்டுமல்ல எந்தெந்த பாடங்களை நடத்துகிறோமோ அந்தப் பாடங்களில் இருந்து மட்டும்தான் தேர்வுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதற்கானஅட்டவணையும் இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும்” என்றார்.

சி.பி.எஸ்.சி. பள்ளிகளுக்கு 10, 11, 12 வகுப்புக்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, “மத்திய அரசை பொருத்த வரையிலும் அவர்களது கருத்துக்களை அவர்கள்தான் தர வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல. மாநில அரசின் செயல்பாடுகளை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.

sengottaiyan Erode
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe