திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொள்வதற்காக வருகை தருகிறார்கள். இதில் கந்த சஷ்டி விரத நாட்களில் அபிஷேகம் மற்றும் தரிசன கட்டணம் உயர்த்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கு இந்து முன்னணி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புதிதாக எந்த விதமான கட்டணஉயர்வும் அமல்படுத்தப்படவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் தான் அதிக கட்டணம் உயர்வு கொண்டுவரப்பட்டது. இந்த விவகாரத்தில் ஒரு சிலர் வேண்டுமென்றே பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்துசமய அறநிலையத்துறை என்ற ஒரு துறையே இருக்காது என்று மனப்பால் குடித்துக் கொண்டிருப்பவர்கள் தான் இதற்கு பின்னணியில் இருக்கின்றனர். ஆனால், தமிழக பக்தர்கள் ஏமாற தயாராக இல்லை” என்று கூறினார்.