minister sakkarapani talk about dmk party and mk stalin

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொப்பம்பட்டியில் மேற்கு, கிழக்கு ஒன்றியம் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மாவட்டதுணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன் தங்கராஜ் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Advertisment

இக்கூட்டத்தில் பேசிய உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, “தமிழகத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் தமிழக முதல்வர் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. 367 வாக்குறுதிகளில் 78 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி பெரிய சாதனையை முதல்வர் படைத்துள்ளார். இரண்டாவது முறையாக திமுக வின்தலைவராகப் பொறுப்பேற்று சிறப்பாகநடத்தி வருகிறார்.புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் மக்களின் மனதைக் கவரும் வகையில் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisment