வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அமமுகவுக்கு பரிசுப் பெட்டகம் சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ஒரு நாள்போதும் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttvd21.jpg)
.
இந்த நிலையில் டிடிவி தினகரன் தனது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு முன் தேர்தல் முடிந்துவிடும் என கூறியிருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
தேனி பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
உசிலம்பட்டி அருகே பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் சின்னமாக பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றும் இருக்காது. அது ஒரு காலி பெருங்காய டப்பா. டிடிவி தினகரன் தனது சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு முன் தேர்தல் முடிந்துவிடும். அவரது சின்னத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றார்.
Follow Us