Advertisment

நெருப்பில் இறங்குவார் எடப்பாடி! -உசுப்பேற்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி! 

rajendra balaji

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="1282094959"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கோழி அபிவிருத்தித் திட்டம் - ஊரக புழக்கடை கோழி வளர்ப்பு குறித்து தமிழக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இன்று சாத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ஆட்சி நிர்வாகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல வள்ளல் தன்மையுடன் செயல்படுகிறார் என எடப்பாடி புகழ் பாடிவிட்டு, பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

Advertisment

“நாங்க கடல்ல இறங்கி வரச்சொன்னாலும் வருவோம். நெருப்புல இறங்கி வரச்சொன்னாலும் முதலமைச்சர் வருவாரு. அவர் தயாரா இருக்காரு. மடியில கனமில்லை, வழியில பயமில்லை. முதலமைச்சர் தெளிவா இருக்காரு, தெம்பா இருக்காரு.” என்று கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்துப் பேசிய அமைச்சர் “கொடநாடு விவகாரத்தில் திமுக பின்புலமாக இருந்து செயல்படுவது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் அறையில் யாகம் நடந்ததை யார் பார்த்தது? அவருடைய அறையில் துணை முதல்வர் சாமிதான் கும்பிட்டார். தேர்தல் களத்தில் அதிமுக, திமுக மட்டும்தான். மற்ற கட்சிகள் களத்திலேயே இல்லை. மோடியின் ஆட்சியில் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது. ஆனால், பிரதமர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை. அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது.” என்றார் வழக்கம்போல் அதிரடியாக.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அமைச்சரின் பேச்சு என்னவோ, சூரியன் திரைப்படத்தில் பூமிதிக்கும் விழா என்று அழைத்துவந்து கவுண்டமணியை தீக்குழியில் இறக்கி அலறவிடும் காட்சியை நினைவுபடுத்துகிறது.

admk Edappadi Palanisamy KD Rajendra Palaji
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe