Advertisment

“பா.ஜ.கவின் சி டீம் தான் விஜய் கட்சி” - அமைச்சர் ரகுபதி

Minister Raghupathi says vijay party is bjp c team

நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட த.வெ.க. தலைவர் விஜய், மேடையில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாமன்னர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டு நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக் கம்பத்தில் அக்கட்சியின் கொடியை விஜய் ஏற்றினார். பின்னணியில் கட்சியின் பாடல் இசைக்க லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் உணர்ச்சி ததும்ப த.வெ.க கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.

Advertisment

இதனையடுத்து இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய், த.வெ.க கொள்கை குறித்தும் கட்சியின் செயல்பாடு குறித்தும் பேசியிருந்தார். மதச்சார்ப்பற்ற சமூக நீதி, ஆட்சி அதிகாரம், இருமொழிக் கொள்கை, தன்னாட்சி உரிமை, மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தீண்டாமை ஒழிப்பு, உற்பத்தி திறன், போதையில்லா தமிழகம் உள்ளிட்ட பல கொள்கைகளை முன்னிறுத்தி த.வெ.க தலைவர் விஜய் பேசியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், இந்த கூட்டத்தில் பேசிய விஜய், பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம், ஊழல் மலிந்த அரசியல் ஆகியவை தான், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி என்று கூறியிருந்தார்.

Advertisment

இது குறித்து பேசிய அவர், “நம்முடைய இயல்பான அடிப்படையான கோட்பாட்டிற்கு எதிராக இருக்கிற மாதிரி மக்களை மதம், சாதி, இனம், மொழி பாலினம், ஏழை, பணக்காரன் என்று சூழ்ச்சி செய்து பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம் நம்முடைய அரசியல் எதிரி. நம்முடைய ஒரு எதிரி இனவாத சக்திகள் என்றால், நம்முடைய இன்னொரு எதிரி ஊழல் கபடத்தாரர்கள். மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். இங்கு யார் வரவேண்டும் யார் வரக்கூடாது. இது மதச்சார்பின்மையைப் பேசுகிற தமிழ்நாட்டு மண். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் பிறந்த மண். சாதி இருக்கும். அது சைலண்டாக மட்டும் தான் இருக்கும். சாதி சமூக நீதிக்கான அளவுகோலாக மட்டுமே இருக்கும். அதனை வைத்து வேற மாதிரி முயற்சி செய்தாலும் அதனை நம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். இந்த மண்ணில் அது அரசியல் தியரி நிரூபிக்கப்பட்டது” என்று பேசினார்.

விஜய் கூறிய கருத்து பல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “திராவிட மாடல் ஆட்சியினுடைய கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்து அகற்ற முடியாது என்பதை நேற்றைய தினம் அவர்கள் வெளியிட்டிருக்கிற ஜெராக்ஸ் காப்பியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். எனவே, அது ஜெராக்ஸ் காப்பி தான். எங்களுடைய கொள்கைகளை, அவர்கள் விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்களே தவிர, திராவிட மாடல் ஆட்சியிலான முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்து செல்ல அந்த கொள்கைகளை தமிழக மக்களிடம் இருந்து யாரும் எடுத்துவிட முடியாது, பிரித்துவிட முடியாது. இதுவரைக்கும், பல அரசியல் கட்சியினுடைய ஏ டீம், பி டீம் பார்த்திருக்கிறோம். இது பா.ஜ.கவின் சி டீம்.

தமிழக மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால், அங்கே எடுபடாது. தமிழக மக்களுடைய வெறுப்புக்கு ஆளாகியிருக்கிற ஆளுநரைப் பற்றி பேசினால், அவருக்கு கொஞ்சம் மரியாதை கிடைக்கும் என்பதாலேயே ஆளுநரைப் பற்றி பேசியிருக்கிறாரே தவிர முழுக்க முழுக்க இது பா.ஜ.கவினுடைய சி டீம். அவர் யாருடைய, சி டீம், பி டீம் இல்லை என்று சொன்னார். தன்னுடைய டீம், சி டீம் என்று அவருக்கே தெரியும், எனவே, அது சி டீம்” என்று கூறினார்.

tvk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe