Advertisment

''வாய் தொறங்க யார் பண்ணது தெரியாதா''-மேடையில் உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் பொன்முடி   

Minister Ponmudi was emotional on the stage

பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.

Advertisment

நிகழ்வில் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி, ''நம்ம தொகுதியில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராகவே இருந்திருக்கிறார் (சி.வி.சண்முகத்தை குறிப்பிட்டு) அவர் தொகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? அதிமுககாரர்கள் யாராவது வந்தார்கள் என்றால் மந்திரியாக இருந்தாரே அவர் என்ன செய்தார் என்று கேளுங்கள். அவர் எப்படி எல்லாம் பேசுகிறார். அவர் சொல்கிறார் 'என் கால் தூசுக்கு சமம்' என்று உதயநிதியை சொல்கிறார். இன்று இளைஞர்களை தீட்டி வருகிற, தமிழ்நாடு முழுவதும் சுற்று சுற்றி வந்து இயக்க கொள்கைகளை பரப்பிக் கொண்டிருக்கிற ஒருவரை பார்த்து இந்த சி.வி.சண்முகம் இப்படி பேசுகிறார். அவர் எங்கிருந்து, எப்படி வந்தார் என்றேதெரியாது.

Advertisment

இந்த சி.வி.சண்முகம் யார் தெரியுமா அவங்க அப்பா எம்.பியா இருந்தவர். அதன் பிறகு இவர் எம்எல்ஏவானார். அவரது அப்பா இல்லனா அவர் யாருன்னே தெரிஞ்சிருக்காது. உதயநிதியைப் பார்த்து பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது. ஏதாவது ஒன்றாவது ஒழுங்காக இந்த மாவட்டத்திற்கு செய்திருக்கிறாரா? தயவுசெய்து நினைத்துப் பாருங்க. இந்த விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட் எப்படி இருந்தது என்று உங்களுக்கு தெரியும். எப்படி இருந்த பேருந்து நிலையம் இப்பஎப்படி மாறி இருக்கிறது. கடைத்தெரு எப்படி வந்திருக்கிறது. இந்த வளர்ச்சி எல்லாம் யாருடைய காலத்தில் ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்டை ஒட்டி கோர்ட். ஆட்டோ பிடிக்க வேண்டாம் நேராக கோர்ட்டுக்கு போலாம்; நேராக கலெக்டர் ஆபீஸ் போகலாம்; நேராகே ஆர்டிஓ ஆபீஸ் போகலாம். தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வசதி விழுப்புரதிற்கு செய்து வைத்துள்ளோம். கலைஞர் ஆட்சியில்தான் முண்டியம்பாக்கத்தில் ஒரு மருத்துவமனை கல்லூரி கட்டப்பட்டது. யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால்கூட இங்கிருந்து முதலில் எல்லாம் பாண்டிச்சேரி ஜிப்மர் போக வேண்டும். இன்றைக்கு பாண்டிச்சேரி ஜிப்மர் வேண்டாம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு செல்கிறோம். அங்கேயே மருத்துவக் கல்லூரி இருக்கிறது. மருத்துவமனை இருக்கிறது என்றால் இதை எல்லாம் கொண்டு வந்தது யாரு?'' என்றவர் உணர்ச்சிவசப்பட்டு ''வாய் தொறங்க யார் பண்ணது தெரியாதா? கலைஞர் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது செய்யப்பட்டது'' என்றார்.

admk villupuram Ponmudi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe