மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்..!

Minister opens Mannachanallur assembly member's office

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது புதிய சட்டமன்ற அலுவலகங்களைத் திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி பொதுமக்களின் குறைகளைக் கேட்டு அறியவும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்திக்கவும் வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டு, இன்று (26.05.2021) மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கதிரவன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்துள்ளார்.

இந்த அலுவலகம் எப்போதும் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்க தயாராக இருக்கும் என்றும் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இந்த அலுவலகத்தை நாடலாம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அலுவலக திறப்பு விழாவில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அலுவலகத்தைத் திறந்துவைத்தார். அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி மாநகர பொறுப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

kn nehru MLA trichy
இதையும் படியுங்கள்
Subscribe