Minister K.N.Nehru criticizes Vijay

சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு, திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. இருப்பினும், பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சீமான் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

Advertisment

இதனால், சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் நிலையங்களில் பதிவாகின. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (25-01-25) திருச்சியில்பேசினார்.

Advertisment

அப்போது அவர், “ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லை. அதற்காக இங்கே ஒரு ஆளைப்பிடித்து பெரியார் குறித்து அவதூறாக பேச வைக்கின்றனர். அதேப்போல இன்னொருவரும் வருகிறார். வந்தவுடனேயே பரந்தூர் விமான நிலையம் வரக்கூடாது என போராடுகிறார். தமிழ்நாட்டிற்கு எந்த தியாகமும் செய்யாமல் நேரடியாக முதலமைச்சராக வேண்டும் என்ற கனவுடன் வருகின்றனர். நீங்கள் எத்தனை கூட்டணி அமைத்தாலும், எது செய்தாலும் 7-வது முறையாக மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைக்கும்” என்று கூறினார்.