அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு தீவிர பிரச்சாரம்!

Minister K. N. Nehru campaigned intensively in support of Arun Nehru

பெரம்பலூர் பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என் நேரு லால்குடி ஒன்றியம் தாளக்குடியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, “தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்தப் பகுதி மக்களின் கோரிக்கை ஏற்று தாளக்குடி பள்ளி தரம் உயர்த்தப்பட்டது. பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது . தி.மு.க.விற்கு ஏற்பட்ட சோதனை காலங்களில் தாளக்குடி உள்ளிட்ட இந்த பகுதியில் கூடுதலாக வாக்குகள் தி.மு.க.வுக்கு கிடைத்தன.

தொடர்ந்து தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்த பகுதியில் அடிப்படை தேவைகள் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தன. மேலும் லால்குடி சட்டமன்ற தொகுதியில் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எப்பொழுதெல்லாம் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைகிறதோ லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து நலத்திட்டங்கள் நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தை வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என பேசினார்.

Minister K. N. Nehru campaigned intensively in support of Arun Nehru

வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் வைரமணி, சௌந்தர பாண்டியன் எம். எல். ஏ. லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திருச்சி கலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், லால்குடி நகர மன்ற தலைவர் துரை மாணிக்கம் என உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு தாளக்குடி, அகிலாண்டபுரம் , மேலவாளாடி ,அப்பாதுரை, திருமண மேடு, பெரியவர் சீலி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். சென்ற இடமெல்லாம் திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்

இதையும் படியுங்கள்
Subscribe